எரிசக்தி அமைச்சகம்

மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகம் சுற்றறிக்கை வெளியீடு

Posted On: 26 MAR 2022 12:53PM by PIB Chennai

நாட்டில் நிலக்கரி விநியோக நிலையைக் கண்காணித்து வரும் மத்திய மின்சார அமைச்சகம், மின்சார உற்பத்திக்கு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படும் நிலக்கரியைத்  தேவையான அளவுக்கு கையிருப்பில் வைப்பதை  உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சார அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது. பற்றாக்குறை ஏற்பட்டால், அதனைச்  சரிசெய்ய ஏற்கனவே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை என்பதை அமைச்சகம் கூறியுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
இதுதவிர, மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக்  குறைக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்

•••••••••••



(Release ID: 1809981) Visitor Counter : 256