கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘செங்கோட்டை திருவிழா – பாரத் பாக்ய விதாதா’ பத்து நாள் நிகழ்வை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தொடங்கி வைத்தார்

Posted On: 25 MAR 2022 4:27PM by PIB Chennai

செங்கோட்டை திருவிழா – பாரத் பாக்ய விதாதா’ எனும் பத்து நாள்  நிகழ்வு இன்று தொடங்கியது. இது தில்லியில் உள்ள 17-ம் நூற்றாண்டின் அடையாளச் சின்னமான செங்கோட்டையில் 2022 ஏப்ரல் 3 வரை தொடர்ந்து நடைபெறும். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி இன்று இந்த விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், புதிய இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைவோம் என செங்கோட்டையிலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி., உறுதியேற்றதை நினைவு கூர்ந்தார். செங்கோட்டை வெறும் நினைவுச் சின்னம் அல்ல. வாழும் உதாரணம் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒவ்வொரு ஆண்டும், அரசியல் சட்டம் குறித்த தேசத்தின் பொறுப்பையும், உறுதியேற்பையும் தீர்மானத்தையும் உணரச் செய்கிறது என்றார். இன்று தொடங்கப்பட்ட விழாவின் மூலம், இந்தியாவின் பன்முக கலாச்சாரம் ஒரு குடையின் கீழ், கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

செங்கோட்டை விழா இந்தியாவின் அனைத்துப் பகுதி கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் நினைவுப்படுத்தும் விழாவாகும் என்று அவர் கூறியிருக்கிறார். விழா அரங்கில் 70-க்கும் அதிகமான சிறந்த கைவினை கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809656

***************



(Release ID: 1809759) Visitor Counter : 192