திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

ஸ்டார்ட்-அப் கிராம தொழில்முனைவோர் திட்டத்தின் தாக்கத்தை மேம்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் உடன் ஐஐஇ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

Posted On: 25 MAR 2022 11:24AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா லட்சியத்திற்கு ஏற்ப, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் (ஐஐஇ) ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களிடையே உள்ளூர் அளவில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல், குறிப்பாக வேலையில்லாத கிராமப்புற மக்களுக்கு சுயவேலைவாய்ப்பு வழிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் துணைத் திட்டமான ஸ்டார்ட்-அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டம் கவனம் செலுத்தும்.

 

கிராமப்புற தொழில் முனைவோர் ஊக்குவிப்புக்கான நிலையான மாதிரியை உருவாக்குவதன் மூலம், கிராமப்புற ஏழைகள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சி, திறன் மேம்பாடு, வணிக ஆலோசனை மற்றும் வங்கி சேவைகள் மூலமும் , சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து கடன்களை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் இது நிறைவேற்றப்படும்.

 

ஐஐஇ இயக்குநர் டாக்டர் லலித் சர்மா மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இயக்குநர் திரு ராகவேந்திர பிரதாப் சிங் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809501

***************(Release ID: 1809669) Visitor Counter : 257