இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தில்லியிலுள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் கல்வான் பல்லத்தாக்கு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாரா-பேட்மிண்டன் வீரர் மானசி ஜோஷி, “நாட்டிற்காக நான் ஒவ்வொரு முறை விளையாடும்போதும் இந்திய ராணுவப் படைகளின் தியாகத்தை நினைவு கூர்வேன்” என்று தெரிவித்துள்ளார்
Posted On:
23 MAR 2022 4:52PM by PIB Chennai
இந்தியாவின் முன்னனி மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனையும், 2019 உலக பாரா-பேட்மிண்டன் சாம்பியனுமான மானசி ஜோசி, அண்மையில் தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள தேசிய போர் நினைவு சின்னத்திற்குச் சென்றார். BWF பாரா-பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் அண்மையில், மகளிர் ஒற்றையர் SL3 பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனை தகுதியைப் பெற்ற மானசி, 2019-ல் தேசிய போர் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதிலிருந்தே அங்கு சென்று நாட்டின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பி வந்தார்.
“2019-லிருந்தே தேசிய நினைவிடத்திற்கு சென்று, நாட்டை பாதுகாக்கும் பணியில் தங்களது இன்னுயிரை ஈந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்த விரும்பினேன். தற்போது கடைசியாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, இதனை எனக்கு கிடைத்த உண்மையான கௌரவமாக கருதுகிறேன்” என்று மானசி தெரிவித்துள்ளார்.
“நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே போர்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பி, நிறைய தகவல்களை அறிந்துள்ளேன். எனது குழந்தை பருவத்திலேயே இது பற்றிய தகவல்களை அறிந்ததால், நமது பாதுகாப்பு படைகளை பற்றி அதிக புரிதல் ஏற்பட்டிருப்பதுடன் மிகுந்த மரியாதையும் வைத்துள்ளேன். எனவே, இது மிகுந்த தாமதமல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.
“நாம் ஒவ்வொரு முறை வெளிநாட்டிற்கு செல்லும்போதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறோம், எனினும் நாம் யாரும் அதனை செய்ததில்லை (நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில்லை). அடுத்த முறை நான் நாட்டின் சார்பில் பங்கேற்கும் போட்டியின்போது இந்த வீரர்கள் அனைவரின் தியாகத்தையும் மனதிற்கொள்வதுடன், எப்போதும் இதனை நினைவு கூர்வேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808741
*******
(Release ID: 1808884)
Visitor Counter : 181