பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தை பராமரிப்பு விடுப்பு

Posted On: 23 MAR 2022 12:27PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பணியாளர் நலன்பொதுமக்கள் குறை தீர்ப்புஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

மத்திய அரசுப் பணிகள் (விடுப்பு) விதிகள், 1972-ன் விதி 43-சி-இன் கீழ்மத்திய விவகாரங்கள் தொடர்பான குடிமைப் பணிகள் மற்றும் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பெண் அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு கீழ்கண்டவாறு தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

(i) 18 வயது வரை இரு குழந்தைகளை பராமரிப்பதற்காக முழு பணி காலத்தில் அதிகபட்சமாக எழுநூற்று முப்பது நாட்கள் வரை.

(ii) ஊனமுற்ற குழந்தைக்கு வயது வரம்பு இல்லை.

(iii) ஒரு நாள்காட்டி ஆண்டில் மூன்று முறைகளுக்கு மேல் இல்லை.

(iv)  துணையற்ற பெண் அரசு ஊழியராக இருந்தால்ஒரு நாள்காட்டி ஆண்டில் மூன்று முறைகள் விடுப்பு வழங்குவது என்பது ஆறாக நீட்டிக்கப்படும்.

விதி 43-சி (3)-ன் படிசில தீவிர சூழ்நிலைகளில் தவிர தகுதி காண் காலத்தின் போது மேற்கண்ட விடுப்பு சாதாரணமாக வழங்கப்படாது.

சிசிஎஸ் (விடுப்பு) விதிகள், 1972-ன் விதி 43-சி-இன் அடிப்படையில்இந்த விடுப்பை உரிமையாகக் கோர முடியாது மற்றும் எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஒரு பணியாளரும் முன் அனுமதியின்றி எடுக்க முடியாது.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808560

******


(Release ID: 1808737) Visitor Counter : 355