விண்வெளித்துறை
ககன்யான் திட்டம்
Posted On:
23 MAR 2022 1:13PM by PIB Chennai
ககன்யான் திட்டத்தின் தற்போதைய நிலை வருமாறு:
- விண்வெளி வீரர்கள் பயிற்சி மையம் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- ககன்யானுக்குத் தேவையான அனைத்து சாதனங்கள் மற்றும் துணை சாதனங்களுக்கான வடிவமைப்பு தயாராக உள்ளது. இதற்கான பனிகள் பல்வேறு கட்டங்களில் முன்னேற்றகரமாக உள்ளது.
- கிரையோஜெனிக் இயந்திர மனித மதிப்பீட்டு நீண்டகால தகுதி சோதனை மற்றும் விகாஸ் இயந்திர மனித மதிப்பீட்டு முதற்கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளன. ககன்யான் விண்கல உந்துசாதனத்திற்கான முதல் கட்ட செயல் விளக்க சோதனைகளும் முடிவடைந்துள்ளன.
- சேவை வழங்குவோரின் களப்பணிக்கான தத்துவ ஆதார செயல்விளக்கமும் நிறைவடைந்துள்ளது
பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808586
***************
(Release ID: 1808736)
Visitor Counter : 416