தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த ஜனவரி மாதத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 15.29 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைவு

प्रविष्टि तिथि: 20 MAR 2022 6:02PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தற்காலிக, ஊதிய தரவு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கடந்த ஜனவரி மாதத்தில் 15.29 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜனவரி மாதம் 2.69 லட்சம் சந்தாதாரர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சேர்ந்த சந்தாதாரர்கள் 15.29 லட்சம் பேரில், 8.64 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்தவர்கள்.  சுமார் 6.65 லட்சம் பேர், பணி மாறுதல் காரணமாக வெளியேறி மீண்டும் இணைந்தவர்கள்.

வயது வாரியாக ஒப்பிடுகையில், 18-25 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் 6.90 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இது ஜனவரி மாதம் சேர்ந்த மொத்த உறுப்பினர்களில் 45.11 சதவீதம் ஆகும்.  இது முதல் முறையாக வேலை தேடுபவர்கள், அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் அதிகளவில் சேர்ந்துள்ளதை காட்டுகிறது.

மாநில வாரியாக ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 9.33 லட்சம் பேர் கடந்த ஜனவரி மாதம் சேர்ந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் சேர்ந்த மொத்த உறுப்பினர்களில் 61 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807431

***********


(रिलीज़ आईडी: 1807463) आगंतुक पटल : 270
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu