நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பங்கேற்பு மூலம் தரமேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்திய தர நிர்ணய அமைவனம் கவனம் செலுத்துகிறது

Posted On: 19 MAR 2022 1:51PM by PIB Chennai

விடுதலைப் பெருவிழாவின் சிறப்பு வார விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் தர மேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்திய தர நிர்ணய அமைவனம்  என்ற தலைப்பில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைமையிடத்தில் இணைய தளக் கருத்தரங்கு நடைபெற்றது. 

இதைத் தொடங்கி வைத்துப் பேசிய பிஐஎஸ் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நுகர்வோர் அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்தும், தரத்தை மேம்படுத்துவதில் அவை பங்காற்றும் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.  அரசு மற்றும் நுகர்வோருக்கு இடையே நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் எவ்வாறு இணைப்புப் பாலமாக செயல்படுகின்றன என்று அவர் விவரித்தார்.

இந்த இணைய தளக் கருத்தரங்கில்  நாடுமுழுவதிலும் இருந்து 200 க்கும் மேற்பட்ட நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு சாராத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

இந்திய தர நிர்ணய அமைவனம் அண்மையில்  உருவாக்கிய நுகர்வோர் பங்கேற்பு இணைய தளம் குறித்து இக்கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.  இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் முன்னெடுப்பு நடவடிக்கைகளை நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் வரவேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலக் குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807257

***************


(Release ID: 1807271) Visitor Counter : 309