நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-22-ம் நிதியாண்டில் நாட்டின் நிகர நேரடி வரி வசூல் ரூ.13,63,038 கோடி: 48.4 சதவீதம் அதிகரிப்பு

Posted On: 17 MAR 2022 6:29PM by PIB Chennai

2021-22ம் நிதியாண்டின் நேரடி வரி வசூல் கடந்த மார்ச் 16ம் தேதி வரை, ரூ.13,63,038.3 கோடி. 2020-21ம் நிதியாண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் வரி வசூல் ரூ.9,18,430.5 கோடியாக இருந்தது. தற்போது வரி வசூல் 48.41 சதவீதம் அதிகரித்துள்ளது.

நிகர நேரடி வரி வசூல் ரூ.13,63,038.3 கோடியில், கார்பரேட் வரி ரூ.7,19,035 கோடி மற்றும் தனிநபர் வருமான வரி மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற வரி ரூ.6,40,588.3 கோடி ஆகியவை அடங்கும். மாற்றியமைக்கப்பட்ட இலக்கு ரூ.12.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில் வரி வசூல் ரூ.13,63,038.3  கோடியாக உள்ளது.

வரித் தொகை திரும்ப வழங்குவதற்கு முன், 2021-22ம் ஆண்டின் மொத்த நேரடி வரி வசூல் ரூ.15,50,364.2 கோடியாக இருந்தது.  இதில் கார்பரேட் வரி ரூ.8,36,838.2 கோடியும், தனிநபர் வருமான வரி, பாதுகாப்பு பரிமாற்ற வரி உட்பட ரூ. 7,10,056.8  கோடியும் அடங்கும்.

வரி வசூலில் அட்வான்ஸ் வரி ரூ. ரூ.6,62,896.3 கோடி. பணி செய்யும் இடத்தில் வரி பிடித்தம்(டிடிஎஸ்) ரூ.6,86,798.7 கோடி.

2021-22ம் நிதியாண்டில் இதுவரை வரி திரும்பச் செலுத்திய தொகை ரூ.1,87,325.9 கோடி.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1807004

***********


(Release ID: 1807035) Visitor Counter : 222