குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஹோலிப் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 17 MAR 2022 5:39PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலிப் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில், “ மங்களகரமான ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும், வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் மன உறுதியையும் கொண்டு வருகிறது. சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு இந்தத் திருவிழா ஒரு  உதாரணம் ஆகும். குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினரும் இந்த பண்டிகையை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

இந்த வண்ணத் திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் நேர்மறையான சக்தியை ஏற்படுத்தி, தேசத்தைக் கட்டமைக்கும்  எழுச்சியை வலுப்படுத்த வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

Please click here to see the President's message -

***************


(रिलीज़ आईडी: 1807003) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Malayalam