கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

தூர் வாரும் கப்பல் கட்டுவதற்காக, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்தியா டிரட்ஜிங் கார்ப்பரேஷன் முதல் முறையாக ஒப்பந்தம்

Posted On: 17 MAR 2022 4:53PM by PIB Chennai

12,000 கியூபிக் மீட்டர் திறனுள்ள தூர் வாரும் கப்பல் கட்டுவதற்காக, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் டிரட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் முதல் ' இந்தியாவில் உற்பத்தி செய்வோம் ' திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைச்  செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பேசியதாவது:

தூர் வாருவதன் முக்கியத்துவத்தை அறிந்து, முக்கிய துறைமுகங்களில் தூர் வாருவதற்கான வழிகாட்டுதல்களை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.

தூர் வாரும் கப்பல்கள் போதிய அளவில் இருப்பது முக்கியமானது. புதிய தூர் வாரும் கப்பல்கள் இருந்தால், தூர் வாரும் பணியை குறித்த ே்நரத்தில் திறம்பட முடிக்க முடியும். தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ், தூர் வாரும் கப்பல் கட்டப்படுவது,  இந்தியாவில் உற்பத்தி  செய்வோம்  திட்டத்தின் உண்மையான பிரதிபலிப்பு ஆகும். சிறந்த தூர்வாரும் கப்பல்களுடன், கடல்சார் இந்தியா தொலைநோக்கின் நோக்கங்களை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் நிறைவேற்ற முடியும்.

இந்தக்  கப்பல் கட்டும் ஒப்பந்தம் மூலம், கப்பல் கட்டுவதற்கான நிதி உதவிகொள்கையின் படி  நிதியதவி பெறமுடியும். இந்த கொள்கையின் கீழ் இந்தியக்  கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த விலையில் 17 சதவீதம் அல்லது நியாயமான விலை அல்லது பெறப்பட்ட உண்மையான தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை நிதியுதவியாக வழங்கப்படுகிறது. கடந்த 2016 முதல் 2026ம் ஆண்டு வரை இத்த நிதியுதவிக்காக ரூ. 4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்திக்  குறிப்பைக்  காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806973

*************



(Release ID: 1806999) Visitor Counter : 120