பிரதமர் அலுவலகம்
இலங்கை நிதியமைச்சர் திரு பசில் ராஜபக்சே பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்
Posted On:
16 MAR 2022 7:07PM by PIB Chennai
அதிகாரப்பூர்வ பயணமாக புதுதில்லி வந்த இலங்கை நிதி அமைச்சர் திரு பசில் ராஜபக்சே பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இருநாடுகளும் எடுத்து வரும் முன் முயற்சிகள் குறித்து பிரதமருக்கு ராஜபக்சே விளக்கியதுடன், இலங்கையின் பொருளாதாரத்திற்காக இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
இந்தியாவின் ‘முதலில் அண்டை நாடு’ என்னும் கொள்கையில் இலங்கை முக்கிய இடத்தில் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இலங்கை மக்களுடன் நட்புறவை இந்தியா தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
***************
(Release ID: 1806972)
Visitor Counter : 171
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam