பாதுகாப்பு அமைச்சகம்

பெங்களூருவில் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பு வளாகத்தை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்

Posted On: 17 MAR 2022 3:35PM by PIB Chennai

கர்நாடகாவின் பெங்களூருவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட்டில் (ஏடிஇ) ஏழு அடுக்கு விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பு வசதியை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மார்ச் 17, 2022 அன்று திறந்து வைத்தார்.

சொந்தக் கலப்பு தொழில்நுட்பத்தின் மூலம் நவீன வசதிகளோடு வெறும் 45 நாட்களில் இந்த  கட்டுப்பாட்டு வளாகம் கட்டப்பட்டது. லார்சன் & டூப்ரோ (எல்&டி) உதவியுடன் இந்த தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. சென்னை ஐஐடி  மற்றும் ரூர்க்கி ஐஐடி ஆகிவற்றின்  குழுக்கள் வடிவமைப்புச் சரிபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளன.

இந்திய நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் இது ஒரு தனித்துவமான திட்டம் என்றும், புதிய இந்தியாவின் புதிய ஆற்றலின் உருவகம் இது என்றும் அமைச்சர் கூறினார். "பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'தற்சார்பு' கொள்கையின் விளைவு இது, என்று அவர் கூறினார்,

 

தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த வசதி, பெரும் பங்காற்றும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். போர் விமானங்களின் விமானிகளுக்கு சிமுலேட்டர் பயிற்சியையும் இந்த வளாகம் அளிக்கும். இது இந்த வளாகத்தின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்று என்று திரு ராஜ்நாத் சிங் விவரித்தார். டிஆர்டிஓ மற்றும் எல்&டி-ஐ அவர் பாராட்டினார்.

ஆயுதப் படைகள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் ஆகியோரின் சிறப்பான, மகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான தேடலில் அவர்களுக்கு ஆதரவளிக்க கூடுதல் முயற்சிகள் தேவை என்ற அரசின் உறுதியை திரு ராஜ்நாத் சிங் மீண்டும் வெளிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806947  

***************



(Release ID: 1806970) Visitor Counter : 230