சுரங்கங்கள் அமைச்சகம்
2021-22 ஏப்ரல் – ஜனவரி காலத்தில் தாதுக்கள் உற்பத்தியின் மொத்த வளர்ச்சி 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளது
Posted On:
17 MAR 2022 11:49AM by PIB Chennai
2022 ஜனவரி மாதத்திற்கான (அடிப்படை: 2011-12=100) தாதுப் பொருட்கள் உற்பத்திக் குறியீடு 124.7 ஆக அதாவது 2021-ஐ இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 2.8 சதவீதம் அதிகரித்திருந்தது. சுரங்கங்களுக்கான இந்திய குழுவின் அண்மைக்கால புள்ளி விவரங்கள் படி, 2021-22 ஏப்ரல் – ஜனவரி காலத்தில் தாதுக்கள் உற்பத்தியின் மொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் 14.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022 ஜனவரியில் முக்கியமான தாதுக்களின் உற்பத்தி நிலை: நிலக்கரி 796 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 46 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், இரும்புத் தாது 215 லட்சம் டன், சுண்ணாம்புக் கல் 341 லட்சம் டன், பாக்சைட் 2157 ஆயிரம் டன், குரோமைட் 398 ஆயிரம் டன், செம்பு 10 ஆயிரம் டன், ஈயம் 29 ஆயிரம் டன், மாங்கனீஸ் தாது 264 ஆயிரம் டன், துத்தநாகம் 145 ஆயிரம் டன், பாஸ்போரைட் 118 ஆயிரம் டன், மேக்னசைட் 10 ஆயிரம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2767 மில்லியன் கனமீட்டர், தங்கம் 107 கிலோகிராம், வைரம் 1 கேரட்.
2021 ஜனவரி மாதத்தை விட, 2022 ஜனவரி மாதத்தில் முக்கியமான தாதுக்களின் உற்பத்தி வளர்ச்சி நிலை: மேக்னசைட் (36.6%) பழுப்பு நிலக்கரி (25.2%), பாக்சைட் (13.4%), தங்கம் (13.3%), இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) (11.7%), நிலக்கரி (8.2%).
முக்கியமான தாதுக்கள் உற்பத்தியில் எதிர்மறை வளர்ச்சி: சுண்ணாம்புக் கல் (-1.2%), பெட்ரோலியம் (கச்சா) (-2.4%), துத்தநாகம் (-2.9%), இரும்புத் தாது (-4.9%), மாங்கனீஸ் தாது (-10%), பாஸ்போரைட் (-11.2%), செம்பு (-15.4%), குரோமைட் (-17.6%), ஈயம் (-19.3%).
**************
(Release ID: 1806916)