சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதால் ஏற்படும் மரணங்கள் தமிழகத்தில் நிகழவில்லை

Posted On: 16 MAR 2022 2:07PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.  

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதால் ஏற்படும் மரணம் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை என்பதால் இது குறித்த எந்த கணக்கெடுப்பையும் தேசிய தூய்மை பணியாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் நடத்தவில்லை.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதால் ஏற்படும் மரணங்கள் எதுவும் தமிழகத்தில் நிகழவில்லை. ஆனால், கழிவு நீர் தொட்டிகளை உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தூய்மை செய்யாததன் காரணமாக 43 பேர் மரணமடைந்துள்ளனர்.

கழிவு அள்ளுவோரின் மறுவாழ்வுக்காக  சுய வேலைவாய்ப்பு திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், கழிவு அள்ளும் நபருக்கு (குடும்பத்தில் ஒருவர்) ஒரு முறை நிதியுதவியாக ரூ 40,000, மாதம் ரூ 3000 உதவித்தொகையுடன் கூடிய திறன் வளர்த்தல் பயிற்சியும், சுய தொழில்திட்ட கடன் பெற்றவர்களுக்கு ரூ 5 லட்சம் வரையிலான மானியமும், காப்பீடும் வழங்கப்படுகிறது.

2016-17-ல் ஒருமுறை நிதியுதவியை 1357 பேரும், திறன் வளர்த்தல் பயிற்சியை 4273 நபர்களும், முதலீட்டு மானியத்தை 196 பயனாளிகளும் பெற்றுள்ளனர்.

2017-18-ல் ஒருமுறை நிதியுதவியை 1171 பேரும், திறன் வளர்த்தல் பயிற்சியை 334 நபர்களும், முதலீட்டு மானியத்தை 159 பயனாளிகளும் பெற்றுள்ளனர்.

2018-19-ல் ஒருமுறை நிதியுதவியை 18079 பேரும், திறன் வளர்த்தல் பயிற்சியை 1682 நபர்களும், முதலீட்டு மானியத்தை 144 பயனாளிகளும் பெற்றுள்ளனர்.

2019-20-ல் ஒருமுறை நிதியுதவியை 13246 பேரும், திறன் வளர்த்தல் பயிற்சியை 2532 நபர்களும், முதலீட்டு மானியத்தை 107 பயனாளிகளும் பெற்றுள்ளனர்.

2020-21-ல் ஒருமுறை நிதியுதவியை 14692 பேரும், திறன் வளர்த்தல் பயிற்சியை 6204 நபர்களும், முதலீட்டு மானியத்தை 157 பயனாளிகளும் பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806509

                           ***************************


(Release ID: 1806711) Visitor Counter : 250