ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.75 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் 47,051 வீடுகள் கட்டப்பட்டுள்ளன
Posted On:
16 MAR 2022 5:31PM by PIB Chennai
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.75 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மாநில வாரியாக கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த விவரத்தை அளித்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் 2020-2021-ஆம் நிதியாண்டில் 52,184 வீடுகளும், இந்த நிதியாண்டில் 09.03.2022 வரை 47,051 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் 2.28 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 09.03.2022 வரை 1.75 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கொவிட் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் வேகம் குறைந்தது. தற்போது அதிக வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு அவை வழங்கப்பட்டு வருகின்றன.
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2.95 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்ற இலக்கை எட்டும் வகையில், இத்திட்டம் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806650
----
(Release ID: 1806696)
Visitor Counter : 273