சுரங்கங்கள் அமைச்சகம்

புதுதில்லியில் 36-வது சர்வதேச புவியியல் மாநாடு

Posted On: 16 MAR 2022 12:05PM by PIB Chennai

36-வது சர்வதேச புவியியல் மாநாடு புதுதில்லியில் வரும் 20 முதல் 22ம் தேதி வரை மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “புவிஅறிவியல்: நிலையான வருங்காலத்துக்கான அடிப்படை அறிவியல்” என்பதாகும்.

மத்திய சுரங்கங்கள் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், இந்திய தேசிய அறிவியல் அகாடமி, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் அறிவியல் அகாடமிகள் சேர்ந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. ஒலிம்பிக் புவிஅறிவியல் என்று கூறப்படும் இந்த மாநாடு, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.  உலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் வரை பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.

மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) புவிஅறிவியல்கள் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பார்கள். மத்திய நிலக்கரி, சுரங்கங்கள், ரயில்வே இணை அமைச்சர் திரு ராவ்சாஹேப் பாட்டீல் தன்வே, தொலைத்தொடர்பு இணை அமைச்சர் திரு தேவுசிங் சவ்கான் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெறவிருந்த இந்த மாநாடு கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806449

----  



(Release ID: 1806493) Visitor Counter : 222