சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமானச் செலவு குறைக்கப்படும் என்று திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்

Posted On: 15 MAR 2022 4:00PM by PIB Chennai

தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமானச் செலவு குறைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்திய அடிப்படைக் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தியாவில் சாலைகள் மேம்பாடு குறித்த 17-வது வருடாந்தர மாநாட்டில் உரையாற்றிய அவர், சாலைகள் அமைப்பதற்கு ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவு போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பொருட்களை சார்ந்திருப்பதை குறைக்க முடியும் என்றார்.

ஒப்பந்ததாரர்களையும் நிறுவனங்களையும் தரவரிசைப்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கான கொள்கையை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.  எத்தனால், மெத்தனால், உயிரி டீசல், உயிரி இயற்கை எரிவாயு, மின்சார பசுமை ஹைட்ரஜன் ஆகியவை எதிர்காலத்திற்கான எரிபொருள்களாக இருக்கும் என்று அவர் கூறினார். அதிகப்படியான மாற்றுகளை உருவாக்குவதற்கான காலம் தற்போது வந்திருப்பதாக திரு கட்கரி கூறினார்.

உயிரிக் கழிவுகளிலிருந்து தார் தயாரிப்பதற்கான கொள்கையை வகுக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சாலைப்பாதுகாப்பை வலியுறுத்திய அமைச்சர், அனைத்து தரப்பினரிடமிருந்தும் இதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படுவதாக கூறினார். 

-----



(Release ID: 1806260) Visitor Counter : 139