பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தில் ஜெனரல் பிபின் ராவத்தின் சிறப்பு நினைவு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது
Posted On:
15 MAR 2022 1:35PM by PIB Chennai
பாதுகாப்புப் படைகளின் மறைந்த தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் 65-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவாக யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா (யுஎஸ்ஐ) நிறுவனத்தில் சிறப்பு இருக்கையை இந்திய ராணுவம் அர்ப்பணித்துள்ளது.
15 மார்ச் 2022 அன்று சவுத் பிளாக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இராணுவத் தலைமைத் தளபதியும், அதிகாரப்பூர்வ தலைவருமான ஜெனரல் எம்.எம்.நரவானே இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டார்.முப்படைகளின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 5 லட்ச ரூபாய்க்கான காசோலை மேஜர் ஜெனரல் பி.கே. ஷர்மா (ஓய்வு), இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தின் இயக்குனர், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொகை பரிந்துரைக்கப்பட்டவருக்கு கெளரவ முறையில் வழங்கப்படும்.
இந்திய முதல் பாதுகாப்புப் படைகளின் முதல் தலைமைத் தளபதியாகவும், இந்திய ராணுவத்தின் 27-வது தலைவராகவும் பணியாற்றி மறைந்த ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த நிபுணராகவும், இந்திய ராணுவத்தில் மிகத் தீவிரமான மாற்றங்களை வழி நடத்தும் பணியில் இருந்தார். ஜெனரல் பிபின் ராவத் நினைவு சிறப்பு இருக்கை, கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு துறையில் கவனம் செலுத்தும். ஜெனரல் பிபின் ராவத்தின் சாதுர்யமிக்க தலைமைத்துவத்திற்கும், தொழில் நிபுணத்துவத்திற்கும் உரிய மரியாதையை அளிக்கும் வகையில் இந்த இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இராணுவத் தலைமை தளபதி, ஜெனரல் ராவத் போர்த்திறன் சார்ந்த சிந்தனைகளில் ஆர்வமுள்ளவர் என்றும், பல்வேறு சிந்தனைக் குழுக்களின் செயல்பாடுகளில் கணிசமான நேரத்தையும் ஆற்றலையும் முதலீடு செய்ததாகவும், அதனால், அவரது 65வது பிறந்த நாள், அறிவுசார் நிறுவனங்களுடனான சேவைகளின் பிணைப்பை வலுப்படுத்த ஒரு சிறந்த தருணமாக அமைந்தது என்றும் கூறினார். மூன்று சேவைகளின் படைவீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற குடிமக்கள் ஆகியோருக்கு இந்த இருக்கை பயனளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806108
***************
(Release ID: 1806201)
Visitor Counter : 325