குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விரைந்து திறம்பட எதிர்வினையாற்றக்கூடிய ஆட்சி முறைக்கான ஆதார அடிப்படையிலான கொள்கைவகுப்பின் முக்கியத்துவத்தை குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்

Posted On: 14 MAR 2022 6:08PM by PIB Chennai

நம்மைச் சுற்றியுள்ள மாற்றங்கள் மற்றும் இடையூறுகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கை வகுப்பின் முக்கியத்துவத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று எடுத்துரைத்தார். வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் திட்டங்களை தொடர்ந்து மறுபரிசீலனை செய்யவும் மறுசீரமைக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இன்று  ஐஎஸ்பி-யின் பொதுக் கொள்கையில் மேம்பட்ட மேலாண்மைத் திட்ட பங்கேற்பாளர்களுடன் உரையாடிய குடியரசுத் துணைத் தலைவர், திடக்கழிவு மேலாண்மை அல்லது வேளாண் கழிவை பணமாக்குதல், காற்று மாசு போன்ற சாமானியர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதுமையான வணிக மாதிரிகளை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு துறையிலும் இதற்கு முன்னில்லாத வகையில் இந்தியா மாற்றங்களை சந்தித்து வருவதாகக் கூறிய திரு. நாயுடு, வெளிப்படைத்தன்மை மற்றும் சேவையை எளிதாக்க, ஜிஎஸ்டி, ரெரா மற்றும் தொழிலாளர் விதிகளை உறுதி செய்வதில் தகவல் தொழில்நுட்பத்தின் அதிகரித்த பயன்பாடு போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை பட்டியலிட்டார்.

"இந்த நடவடிக்கைகள் இந்தியாவை வணிகம் செய்வதற்கு சிறந்த மற்றும் சாதகமான சூழலுக்கு இட்டுச் செல்கின்றன" என்று அவர் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சி விகிதம் குறித்த உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளை மேற்கோள் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் நாடு அளிக்கிறது என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"விரும்பிய மாற்றத்தை கொண்டு வர, அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுவதும், சிறந்த மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்குவதும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

இந்தியாவில் நகரமயமாக்கலின் விரைவான வேகத்தைப் பற்றிப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், "மலிவு விலையில் வீடுகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை நகர்ப்புற மக்கள் பெறுவதை நமது கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்," என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1805889

                                                                                *********************

 

 

 


(Release ID: 1805965) Visitor Counter : 208