உள்துறை அமைச்சகம்

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

2002 முதல் 2013 வரை , திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, சட்டம் ஒழுங்கை அவர் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கினார்

குஜராத்தின் முதலமைச்சராக திரு மோடி பதவியேற்றபோது, அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை காவல்துறையை நவீனமாக்கியதுதான், அவரது தலைமையின் கீழ், குஜராத் கணினிமயமாக்கப்பட்ட காவல்நிலையங்களைக் கொண்ட முதல் மாநிலமாக ஆனது

காவல் நிலையங்களை இணைக்கும் நவீன மென்பொருளுக்கான தளத்தை திரு மோடி தயாரித்தார், அதன் மூலம், கணினியைக் கையாளும் திறன்பெற்றவர்கள் காவலர்களாக பணியமர்த்த முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு, காவல்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டது

நாட்டில் மிகச்சிறந்த சட்டப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது, தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கான தொலைநோக்கு, உலகத்தரம் வாய்ந்த தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை குஜராத்தில் உருவாக்குவது ஆகிய மூன்று பெரிய முன்முயற்சிகளை திரு நரேந்திர மோடி

Posted On: 12 MAR 2022 6:08PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகத்தைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்  துறை அமைச்சர் திரு அமித் ஷா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ விரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், 2002 முதல் 2013 வரை , திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, சட்டம் ஒழுங்கை அவர் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கியதாக குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து, சட்டம் ஒழுங்கை வெறும் பணியாக மட்டும் கருதுவது வழக்கமாக  இருந்து வந்தது. காவல் நிலையங்களை இணைக்கும் நவீன மென்பொருளுக்கான தளத்தை திரு மோடி தயாரித்தார், அதன் மூலம், கணினியைக் கையாளும் திறன்பெற்றவர்கள் காவலர்களாக பணியமர்த்த முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு, காவல்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டது.

அதன் பின்னர், தடயவியல் ஆய்வகங்களை சிறைகளுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநில முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, நாட்டில் மிகச்சிறந்த சட்டப்  பல்கலைக்கழகத்தை உருவாக்குவது, தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகத்துக்கான தொலைநோக்கு, உலகத்தரம் வாய்ந்த தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை குஜராத்தில் உருவாக்குவது ஆகிய மூன்று பெரிய முன்முயற்சிகளை திரு நரேந்திர மோடி எடுத்தார் என்று திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் திரு மோடி பெரும் அளவிலான மாற்றங்களைப்  படிப்படியாக மேற்கொண்டு, அதனை நாட்டின்  முன் மாதிரியாக வைத்தார>

மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் அதே பகுதியில் பங்களிக்க முன்வருவதற்கு வழி ஏற்படும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் குஜராத்தில் வெறும் மூன்றே ஆண்டுகளில், தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 22 சதவீதமாக உயர்ந்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிபுணர்கள், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தயாரிக்கப்பட வேண்டும், இந்த அனைத்து அம்சங்களும் பிரதமரால் ஏற்படுத்தப்பட்டவையே என அவர் கூறினார்.

2014-ல், மக்கள் திரு மோடியைப்  பிரதமராக தேர்ந்தெடுத்து நாட்டுக்கு சேவை புரியும் வாய்ப்பை வழங்கியபோது, ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த நடைமுறைகளை உடைத்து, காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுவரும் வேறுபட்ட அணுகுமுறையை  அவர் முயற்சித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் இதற்கு ஒரு உதாரணமாகும். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல அமைப்புகளுடன் பணியாற்றி, அவற்றின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு  பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.

2018-ம் ஆண்டு முதல் 5 பிரிவுகளைச் சேர்ந்த 1,091 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். இங்கு பட்டம் பெற்ற அனைவரும், ஏதாவது ஒரு வழியில் நாட்டுக்கு நிச்சயமாக பங்களிக்க முடியும் என்று கூற விரும்புவதாக  அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழக வளாகங்கள் நாடு முழுவதும் திறக்கப்படும் போது, பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் காவல்துறை படைகளில் பணியாற்றும் போது, காவல்துறையின் ஒத்துழைப்பு பணிகளில் நிபுணர்களாக திகழும்போது, நாட்டில் காவல்துறை படைகளை ஒற்றுமை உணர்வுடன் நடத்தும் இலக்கை தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் எட்டும் என்று அமித் ஷா கூறினார்.

                           *****************



(Release ID: 1805389) Visitor Counter : 216