தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு 8.10% வட்டி வீதத்திற்கு மத்திய வாரியம் பரிந்துரை

Posted On: 12 MAR 2022 4:30PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் 30-வது கூட்டம் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் சின்னமான வாரக் கொண்டாட்டத்தின்  போது கவுகாத்தியில் இன்று ​ நடைபெற்றது.

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர், வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி கூட்டத்தின் துணைத் தலைவராகவும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் திரு சுனில் பார்த்வால் மற்றும் மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையரும் உறுப்பினர் செயலருமான திருமதி நீலம் ஷம்மி ராவ் இணைத் தலைவர்களாகவும் இருந்தனர்.

2021-22 நிதியாண்டிற்கான உறுப்பினர்களின் கணக்குகளில் 8.10% வருடாந்திர வட்டியை  வரவு வைக்க மத்திய வாரியம் பரிந்துரைத்தது. வட்டி வீதம் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து ​​வட்டித் தொகையை  சந்தாதாரர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வரவு வைக்கும்.

முதலீட்டில் பழைய அணுகுமுறையை வருங்கால வைப்பு நிதி அமைப்பு பின்பற்றினாலும், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. சந்தாதாரர்களுக்கு அதிக வட்டியை விநியோகிக்க இது உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805345

***************



(Release ID: 1805356) Visitor Counter : 367