ஆயுஷ்

யோகா பெருவிழாவுடன் 8-ஆவது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கவுள்ளது

Posted On: 12 MAR 2022 1:07PM by PIB Chennai

மத்திய ஆயுஷ்  அமைச்சகத்தின் கீழ் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா கழகம் யோகா 2022 பெருவிழாவுக்கு நாளை (13.03.2022) ஏற்பாடு செய்துள்ளது.  சர்வதேச யோகா தினம் 2022 கொண்டாட்டத்தின் 100 நாள் கவுண்ட் டவுன் தொடங்குவதை குறிக்கும் வகையில், மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல்  மற்றும் நீர்வழிப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங்க், மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, ஆயுஷ் மற்றும் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 உடல் நலன், சுகாதாரம், உலக அமைதி ஆகியவற்றுக்காக  கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் 2022-ன் 100 நாள் கவுண்ட் டவுன் தொடங்குவதையொட்டி,  யோகாவின் பல்வேறு  வகைகள் குறித்து விளம்பரப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 -2022 வரை 100 நகரங்களில் 100 அமைப்புகள் மூலம், இந்த கவுண்ட் டவுன் இயக்கம் நடைபெறவுள்ளது.  கடந்த 2015 ஆம் ஆண்டு  சர்வதேச யோகா தின கொண்டாட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா கழகம், யோகா பெருவிழாவை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805310

***************



(Release ID: 1805324) Visitor Counter : 396