ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊட்டச்சத்து குறைபாடு குறித்து நாடுமுழுவதும் சுமார் 5,000 பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்

Posted On: 12 MAR 2022 11:40AM by PIB Chennai

ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, எடை குறைவான குழந்தைகள் பிறப்பு குறித்து கிராமப்புற  பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 5,000–க்கும் மேற்பட்ட பெண்கள் நாடுமுழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தியுள்ளனர்.

 சுதந்திரப் பெருவிழாவின் ஒருபகுதியாக, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ்  இந்த சிறப்பு வார விழா நடைபெற்றது.  மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட அமலாக்க முகமையைச் சேர்ந்தவர்கள் ஊரக பெண்களுக்கு இடையே ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பேரணி மூலம் எடுத்துரைத்தனர்.

இதில் பங்கேற்ற பெண்கள் கிராமம் முழுவதும் நடைப்பயணம் வாயிலாகவும், சைக்கிள் பேரணி மூலமாகவும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.  மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி மூலம், நாடுதழுவிய வேலை வாய்ப்பு சார்ந்த திறன் பயிற்சி திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஊரகப்பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை  பெற்றுத் தருவதை நோக்கமாக கொண்டுள்ளது.  நாட்டில் 27 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  2 ஆயிரத்து 381 பயிற்சி மையங்கள் மூலம் 871 திட்ட அமலாக்க முகமைகளுக்கு மேல் ஊரக பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

***************


(Release ID: 1805323) Visitor Counter : 315