கலாசாரத்துறை அமைச்சகம்
சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆவணக் காப்பகத்தின் 132-வது நிறுவன தினத்தையொட்டி ஆவணப்படுத்துதல் பற்றிய கண்காட்சிக்கு தேசிய ஆவணக் காப்பகம் ஏற்பாடு
Posted On:
11 MAR 2022 3:44PM by PIB Chennai
சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, ஆவணக் காப்பகத்தின் 132-வது நிறுவன தினத்தையொட்டி ஆவணப்படுத்துதல் குறித்து மத்திய கலாச்சார அமைச்சகத்துக்கு உட்பட்ட தேசிய ஆவணக் காப்பகம் ஏற்பாடு செய்துள்ள ‘அணுகல் & இணைப்புக்கான சாதனங்கள்: ஒரு ஒருமைப்பாட்டு பயணம்’ என்ற தலைப்பிலான கண்காட்சியை, மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, புதுதில்லியில் இன்று (11.03.2022) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திருமதி மீனாட்சி லேகி, நமது மூலங்களை வலுப்படுத்தி எதிர்காலத்தி்ற்கு அடித்தளமிட நமது வரலாற்றைப் படிப்பதும், எழுதுவதும் இன்றும் அவசியமாக உள்ளது என்றார். இந்தக் கண்காட்சி நமது வரலாறு, இந்தியாவை கட்டமைக்க உதவிய ஆவணங்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் பழங்கால சமஸ்தானங்களைப் பற்றிய ஆவணங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது. நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்ட நிகழ்வுகளை புரிந்துகொள்ள அவற்றைப் பற்றி சித்தரிப்பதும் படிப்பதும், எழுதுவதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்காட்சியின் நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு புகைப்படங்கள், பத்திரிகைக் குறிப்புகள், தனியார் ஆவணங்கள் மற்றும் அது தொடர்பான வரைபடங்களும், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சி 10 மே, 2022 வரை விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாட்களில் காலை பத்து மணி முதல், மாலை ஐந்து மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805071
----
(Release ID: 1805160)
Visitor Counter : 240