குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பாரம்பரிய அறிவாற்றல் முறைகளில் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
Posted On:
11 MAR 2022 3:25PM by PIB Chennai
இயற்கை விவசாயம் மற்றும் மருத்துவமுறைகள் போன்ற பாரம்பரிய அறிவாற்றல் முறைகளில், அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்துவதுடன், ‘நமது அறிவுசார் தலைமையிடத்தை மீண்டும் அடைய’ முறையான வழியில் முயற்சிக்குமாறு பல்கலைக்கழகங்களை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மிசோரம் மற்றும் சிக்கிமில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர், காங்டாக்கில் இன்று (11.03.2022) கஞ்சென்சோங்கா, மாநில பல்கலைக்கழகத்திற்கு இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக திகழ்வதற்கும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தொழில்பயிற்சியை ஒரு பாடமாக வைத்திருப்பதற்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக தொடக்க பள்ளிகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியிருப்பதையும் அவர் பாராட்டினார்.
ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுப்படுத்துவதில் பல்கலைக்கழங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்திய திரு நாயுடு, ‘தரமான உயர்கல்வி, உயர்கல்வி மூலம், நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய கிரியா ஊக்கியாக கல்வியை மாற்றியதில் சிக்கிம் மாநிலம் முன்னோடியாக திகழ்வதாக கூறினார். பாடப்பிரிவுகள், ஆற்றல் மிக்கவையாகவும், மாறி வரும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப நெகிழும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்ளூர் பிணைப்புகளை ஏற்படுத்தி, மண்டலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு புதுமையான முறையில் தீர்வு காண பல்கலைக்கழகங்கள் முன்வரவேண்டும் எனவும் குடியரசு துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.
உலக அளவில் சிந்தித்து உள்ளூர் மட்டத்தி்ல் அதனை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சூழல்-சுற்றுலா, தோட்டக்கலை, கைவினைப் பொருட்கள் உற்பத்தி போன்ற வடகிழக்கு பிராந்தியத்தின் வலிமைகளைப் பயன்படுத்தி மாணவர்கள் சிறப்புற்று திகழ வேண்டும் எனவும் திரு வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.
நாட்டில் வளர்ச்சி சரித்திரத்தில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்குதாரர்களாக திகழ்கின்றன என்றும் திரு வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805063
(Release ID: 1805099)
Visitor Counter : 195