ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் புதிய வகுப்புகளைத் தொடங்கியுள்ளன

Posted On: 10 MAR 2022 11:36AM by PIB Chennai

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவின் ஒருவார கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊரக மேம்பாட்டுத் துறை மூலம் சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில் 2022 மார்ச் 7 அன்று நாடுமுழுவதும் பெண்களை மையப்படுத்திய புதிய பயிற்சி வகுப்புகளை ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்  தொடங்கின.  இதில் பங்கேற்றவர்களில் 66 சதவீதம் பேர் பெண்களாவர். 

வீட்டில் அகர்பத்தி செய்தல், பொம்மைகள் செய்தல் மற்றும் விற்றல், அப்பளம், ஊறுகாய், மசாலாப் பொடி தயாரித்தல், அழகுநிலைய நிர்வாகம் போன்றவற்றில் புதிய தொகுப்பினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், மத்திய அரசு, மாநில அரசுகள், நிதியுதவி  செய்யும் வங்கிகள் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.   ஊரக இளைஞர்களுக்கு சுயவேலை செய்யவும், தொழில்களை தொடங்கவும் மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி நிலையத்தையாவது  தொடங்க வேண்டும் என்பது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804674

***************(Release ID: 1804697) Visitor Counter : 246