ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் ஜல்ஜீவன் மற்றும் கிராமப்புற தூய்மை இந்தியா திட்டம் பற்றிய 6 மாநிலங்களின் கருத்தரங்கு: ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் தலைமை தாங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAR 2022 4:25PM by PIB Chennai

பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மிசோரம், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற தூய்மை இந்தியா திட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடந்தது. இதற்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் தலைமை தாங்கினார். இதில் இத்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கலந்து கொண்டார்.

இதில் துவக்கவுரையாற்றிய மத்திய அமைச்சர்  திரு கஜேந்திர சிங் செகாவத் பேசியதாவது:

ஜல்ஜீவன் திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் தொடங்கியபோது, 17 சதவீத கிராம வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. கோவிட் முடக்கத்துக்கும் இடையிலும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 5.91 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கினோம்.  கிராமங்களில் 47.39 சதவீத வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பை பெற்று பயனடைகின்றன. 2022-23ம் ஆண்டுக்கு 6 மாநிலங்களின் குடிநீர், கழிவு மேலாண்மைக்கு  ரூ.14.449 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா பகுதிகளாக கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அறிவித்ததன் மூலம் நாடு பெருமை அடைகிறது. கங்கை நதியில் சுத்திகரிக்கப்படாத நீர் கலக்காமல் இருப்பதை, கங்கை நதி கரையில் உள்ள மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.

தண்ணீர் பரிசோதனை ஆய்வு கூடங்கள் மாவட்ட அளவில் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும், குடிநீர் குழாய்களில் வரும் நீர் தரமாக இருப்பதை உறுதி செய்வது மிக அவசியம் என மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கூறினார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804408

                                                                                **********************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1804580) வருகையாளர் எண்ணிக்கை : 228
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali