ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யாபீடத்தின் பட்டமளிப்பு விழா: ஆயுஷ் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் மார்ச் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 09 MAR 2022 4:52PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யா பீடம் தனது 25வது பட்டமளிப்பு விழாவை மார்ச் 11ம் தேதி கொண்டாடுகிறது. இதை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால்தொடங்கி வைக்கிறார்.

விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவத்தை நாடு கொண்டாடுவதால்இந்தாண்டு பட்டமளிப்பு விழாவின் கருப்பொருள்,  ‘‘ஆயுர்வேத உணவு - ஆரோக்கிய இந்தியாவின் அடிப்படை’’.

மார்ச் 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில்ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யா பீடத்தில்சமீபத்தில் படிப்பை முடித்த 155 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.  அடுத்த கட்ட மாணவர்  சேர்க்கை ‘சிஷ்யோபநயனா’  மார்ச் 12ம் தேதி தொடங்கும்.  இதில் 225 மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் மாணவர் சேர்க்கையை ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யா பீடம் மேற்கொள்கிறது.

இந்தியாவிலும்வெளிநாடுகளிலும் ஆயுர்வேத வளர்ச்சிக்கும்பிரச்சாரத்துக்கும்தங்கள் வாழ்க்கை முழுவதும் சிறந்த பங்களிப்பை அளித்த டாக்டர்.சுபாஷ் ரானாடே மற்றும் வைத்திய தாராசந்த் சர்மா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆயுஷ் அமைச்சர்இந்த பட்டமளிப்பு விழாவில் வழங்குகிறார்.

சுபாஷ் ரானாடே,  ஆயுர்வேத துறையில் முன்னணி கல்வியாளர் மற்றும் மருத்துவர் ஆவார்.. ஆயுர்வேதம்யோகா பற்றி இவர் 155 புத்தகங்களை எழுதியுள்ளார்.  புனே பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறை தலைவராகவும்புனேவில் உள்ள அஸ்தாங் ஆயுர்வேத கல்லூரியின் முதல்வராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

வைத்திய தாராசந்த் சர்மா கடந்த 1967ம் ஆண்டிலிருந்து ஆயுர்வேத துறையில் சேவை செய்கிறார். பல ஆயுர்வேத மையங்களில் இவர் பணியாற்றி பல விருதுகளை பெற்றுள்ளார். நாடி வைத்தியத்தில் இவர் நிபுணர். ஆயுர்வேதத்தில் இவர் 21 புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804421

                           **********************


(रिलीज़ आईडी: 1804517) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu