மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAR 2022 1:29PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் நவம்பர் 2021-ல் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறன் மேம்பாடு, புள்ளிவிவர சேகரிப்பு போன்றவற்றுடன் திறன் மேம்பாட்டுக்கான மண்டல மையமாக இந்தியாவை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பூச்சிகளால் பரவக் கூடிய மூன்று முக்கிய நோய்கள் (மலேரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படக் கூடிய கருங்காய்ச்சல், யானைக்கால்) பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804283

----- 


(வெளியீட்டு அடையாள எண்: 1804372) வருகையாளர் எண்ணிக்கை : 371