உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவிலிருந்தும் இந்தியாவிற்கும் வர்த்தக ரீதியிலான சர்வதேச பயணிகள் விமான சேவை 27.03.2022 முதல் மீண்டும் தொடங்குகிறது

Posted On: 08 MAR 2022 5:26PM by PIB Chennai

கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக ரீதியிலான சர்வதேச பயணிகள் விமான சேவை இந்தியாவிலிருந்தும் இந்தியாவிற்கும் 27.03.2022 முதல் மீண்டும் தொடங்குகிறது.

உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்திருப்பதையடுத்து விமானப் போக்குவரத்து தொடர்பான அனைவருடனும் கலந்தாலோசனை செய்து மத்திய அரசு இந்த  முடிவை  மேற்கொண்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்தின் 28.02.2022 தேதியிட்ட தற்காலிக நிறுத்த  உத்தரவு 26.03.2022 அன்று இந்திய நேரப்படி நள்ளிரவு மணி 23.59 வரை மட்டுமே நீடிக்கும். இதற்கேற்ப 27.03.2022-லிருந்து விமான சேவைகளைத் தொடங்க ஏற்பாடுகள் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்தின் போது சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

***********(Release ID: 1804100) Visitor Counter : 112