சர்வதேச மகளிர் தினத்தை இன்று நாம் கொண்டாடும் நிலையில், ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை வென்று உலகக் கோப்பையை வெல்வதற்கான நிலையை எட்டியுள்ளது. இந்தப் புகழ்மிக்க தருணத்தை நேயர்களுடன் கொண்டாட ஒருமாத காலம் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பற்றிய நேர்முக வர்ணனையை அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்ப பிரசார் பாரதி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நேரடி ஒலிபரப்பை மிகவும் ஆர்வமுள்ளதாகவும், அனைவரும் ஈடுபாடு கொள்வதாகவும், மாற்றுவதற்கு சிறப்பு நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி நடத்த உள்ளது. இதில், இந்தப் போட்டித் தொடரின் பல்வேறு நிலைகளில், ஏற்படும் நிகழ்வுப் போக்குகள் குறித்து விளையாட்டுத்துறை நிபுணர்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் நடைபெறும்.
போட்டி தொடங்குவதற்கு முன்பும், போட்டிக்கு இடையேயும், போட்டி முடிந்த பிறகும் அகில இந்திய வானொலியுடன் இணைந்திருக்கும் நேயர்கள் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்கலாம்.
டிஜிட்டல் முறையில் இந்த நிகழ்ச்சிகளை பிரசார் பாரதியின் விளையாட்டுப் பிரிவுகள் யூட்யூப் அலைவரிசையில் கேட்கலாம். - https://www.youtube.com/c/PrasarBharatiSports அதே போல் அகில இந்திய வானொலியின் விளையாட்டுக்கள் பிரிவு ட்விட்டரிலும், @akashvanisports தூர்தர்ஷனின் விளையாட்டுக்கள் பிரிவு ட்விட்டரிலும் @ddsportschannel நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
அனைத்து போட்டிகளையும் இடம் பெறச் செய்வதற்கு வசதியாக ஒவ்வொரு மணிக்கும் போட்டிகளின் அப்போதைய நிலைமை குறித்து நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களிலும், சம்பந்தப்பட்ட மாநில மொழிகளிலும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்..
கிரிக்கெட் போட்டிகளின் நேர்முக வர்ணனையை பண்பலை (எஃப்எம்) ரெயின்போ அலைவரிசைகளில் கேட்கலாம்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803851
***************