தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

யூப் டிவி - சர்வதேச ஓடிடி தளத்தில் டிடி இந்தியா அலைவரிசை பெருமளவில் சென்றடைகிறது

Posted On: 07 MAR 2022 12:26PM by PIB Chennai

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பை உலகளவில் எடுத்துச் செல்லும் அளவில், டிடி இந்தியா அலைவரிசையை யூப் டிவி, ஓடிடி  தளத்தில் இடம் பெறச் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவின் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கையெழுத்திட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கான நுழைவாயில்.யூப் டிவி மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் யூப் டிவியின் ஓடிடி தளத்தில் டிடி இந்தியா அலைவரிசையை தற்போது காணமுடிகிறது.

டிடி இந்தியா அலைவரிசையின் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் உள்நாட்டு மற்றும் உலகளவிலான முன்னேற்றங்கள் பற்றி இந்தியாவின் சிந்தனை, சர்வதேச அளவில் தொலைக்காட்சி நேயர்களுக்கு  அளிக்கப்படுகிறது. இந்த அலைவரிசை 190க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்தியாவுக்கும் உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியா வம்சாவளியினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் ஊடகமாகவும் டிடி இந்தியா அலைவரிசை திகழ்கிறது. 

யூப் டிவி மூலம் உலகின் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஒருவர் நிகழ்ச்சிகளைக் காணமுடியும். இந்தியாவின் தொலைக்காட்சி அலைவரிசையை  யூப் டிவி மூலம் சர்வதேச அளவில் எளிதாகவும் குறைந்த செலவிலும் காணமுடியும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  பிரசார் பாரதியின்  தலைமைச் செயல் அதிகாரி சஷி சேகர் வேம்பட்டியும் யூப் டிவி நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான உதய் ரெட்டியும் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803511

*****



(Release ID: 1803581) Visitor Counter : 223