வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்: கழிவு மேலாண்மையில் பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கான தேசிய மாநாட்டை தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் 2.0 நடத்தியது
Posted On:
05 MAR 2022 9:13AM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கழிவு மேலாண்மையில் பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கான தேசிய மாநாட்டை தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் 2.0 நடத்தியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் சத்தீஸ்கர் அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ராய்பூரில் நடைபெற்றது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல்வேறு மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கற்றலுக்கான தளமாக நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்வு அமைந்தது.
தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0-ன் கீழ் "குப்பை இல்லாத நகரங்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு கட்டமைப்பு" இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது, நாட்டில் நகர்ப்புற சுகாதாரத் துறையை வலுப்படுத்த தொடர்புடைய பங்குதாரர்களின் திறன் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு இது உதவும்.
19 மாநிலங்கள் மற்றும் அவற்றின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், துறை ரீதியான பங்குதாரர்கள், பெண்கள் தலைமையிலான கழிவு மேலாண்மை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பெண்கள் தலைமையிலான கழிவு மேலாண்மை நிறுவனங்களின் விளக்கக் காட்சிகள் இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக விளங்கின.
திருச்சிராப்பள்ளியில் இயங்கும் "ஷீ டீம்கள்" என்று அழைக்கப்படும் பெண்கள் தலைமையிலான சுயஉதவி குழுக்கள், குடிசைப்பகுதிகளில் சமூக கழிப்பறைகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும், குடிசை சமூகங்களில் ஆரோக்கியமான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் தொழில் முனைவோர் முயற்சிகளை நிறுவியுள்ளன. இக்குழுக்களின் பணி குறித்து மாநாட்டில் விளக்கப்பட்டது.
https://youtu.be/5TP1rjZGFA8 எனும் இணைப்பில் இம்மாநாட்டின் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. குப்பை இல்லாத நகரங்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு கட்டமைப்பை
https://sbmurban.org/storage/app/media/pdf/National%20Capacity%20Building%20Framework%20%20SBM-U%202.0.pdf .எனும் இணைப்பில் காணலாம்.
மேலும் தகவல்களுக்கு தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறத்தின் இணைய தளமான www.swachhbharaturban.gov.in மற்றும் முகநூல் பக்கமான Swachh Bharat Mission - Urban, டிவிட்டர் பக்கமான @SwachhBharatGov/, இன்ஸ்டாகிராம் பக்கமான sbm_urban மற்றும் யூட்யூப் பக்கமான Swachh Bharat Urban ஆகியவற்றைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803096
***************
(Release ID: 1803175)
Visitor Counter : 192