வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் இந்தியா-பங்களாதேஷ் இடையிலான வர்த்தக செயலர்கள் கூட்டம்

प्रविष्टि तिथि: 05 MAR 2022 10:04AM by PIB Chennai

இந்தியா-பங்களாதேஷ் இடையிலான வர்த்தக செயலர்கள் அளவிலான கூட்டம் புதுதில்லியில் மார்ச் 4-ந்தேதி நடைபெற்றது. இந்திய குழுவுக்கு மத்திய அரசின் வர்த்தக செயலர் திரு பி.வி.ஆர். சுப்ரமண்யமும், பங்களாதேஷ் தரப்பில் அந்நாட்டு வர்த்தக அமைச்சக செயலர் திரு தபன் காந்தி கோஷ்-ம் தலைமை வகித்தனர்.

ரயில்வே உள்கட்டமைப்பு, துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், விரிவான பொருளாதார ஒப்பந்தம் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து இருதரப்பும் விரிவான விவாதங்களை நடத்தியது.

இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நாடுகளில் பங்களாதேஷ் ஆறாவது நாடாக உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

கூட்டு பணிக்குழுவின் அடுத்த கூட்டத்தை பங்களாதேஷில் இருதரப்புக்கும் வசதியான தேதிகளில் நடத்துவது என கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்

***************


(रिलीज़ आईडी: 1803130) आगंतुक पटल : 343
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu