சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

குஜராத்தின் கெவாடியாவில் நடைபெற உள்ள 2 நாள் (4 மார்ச்- 5 மார்ச்- 2022) உணர்திறன் பயிலரங்கை மத்திய சமூக நீதி & அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்

Posted On: 03 MAR 2022 1:46PM by PIB Chennai

குஜராத்தின் கெவாடியாவில் மத்திய சமூக நீதி & அதிகாரம் அளித்தல் துறை ஏற்பாடு செய்துள்ள 2 நாள் (4 மார்ச்- 5 மார்ச்- 2022)  உணர்திறன் பயிலரங்கை அத்துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கவுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரக்கூடிய முன்மாதிரி இடங்களில் ஒன்றான ஒற்றுமை சிலையை (சர்தார் பட்டேல் சிலை) பார்வையிடுவதும் இந்த பயிலரங்கின் ஒருபகுதியாகும்.

தேசிய அறக்கட்டளையின் சுயஉதவி குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும்  ஆலிம்கோ நிறுவனத்தின் உதவி சாதனங்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகுவதற்கான மற்றும் கட்டமைப்பு தொடர்பான திரைப்படம் ஒன்று, திரையிடப் படுவதுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை ஆணையர் அலுவலக அதிகாரப்பூர்வ வலைதளமும் இந்த நிகழ்ச்சியின் போது தொடங்கி வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802590

***************



(Release ID: 1802685) Visitor Counter : 159