பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 19-வது ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆக்ராவில் நடத்தின
Posted On:
02 MAR 2022 3:22PM by PIB Chennai
இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்சிஜி) 19-வது பதிப்புக் கூட்டம் மார்ச் 01-02, 2022ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு இந்தியத் தரப்பில் இருந்து சிஐஎஸ்சி தலைவர் ஏர் மார்ஷல் பி. ஆர். கிருஷ்ணா மற்றும் அமெரிக்க தரப்பில் இருந்து அமெரிக்க இந்தோ-பசிஃபிக் கமாண்ட் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீபன் டி ஸ்க்லெங்கா தலைமை தாங்கினர். இரு தரப்புக்கும் இடையே நிலவிவரும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், தற்போதுள்ள ஒத்துழைப்பு நடைமுறையின் கீழ் புதிய முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழு என்பது தலைமையகம், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிஃபிக் பிரிவு ஆகியவற்றுக்கு இடையேயான யுத்தி சார்ந்த மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் மூலம் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802310
********
(Release ID: 1802410)
Visitor Counter : 244