வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
“உலகத்துக்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்பது குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்குக்கு டிபிஐஐடி ஏற்பாடு
தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
02 MAR 2022 1:26PM by PIB Chennai
இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டுமென்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குக்கு இணங்க மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கை ”உலகத்திற்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்ற பெயரில் 3-ம் தேதி வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியா @100 என்பதற்கான திட்டமிடுதலை மத்திய பட்ஜெட் 2022-ல் முன்னெடுத்துச் செல்கிறது உற்பத்தித் துறையை முக்கிய அம்சமாக கொண்டு வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் டிரில்லியன் டாலர் இலக்கை எட்டும் வகையில் எம்.எஸ்.எம்.இ துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்தக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார். மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், மத்திய, மாநில மொழில் துறை மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802275
***************
(रिलीज़ आईडी: 1802376)
आगंतुक पटल : 258