குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கல்வித்துறையில் இந்தியாவை மீண்டும் விஸ்வகுருவாக மாற்ற குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
01 MAR 2022 6:10PM by PIB Chennai
கல்வித்துறையில் இந்தியாவை மீண்டும் விஸ்வகுருவாக மாற்ற வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு, தேசிய கல்விக் கொள்கை-2020 இந்த திசையை நோக்கிய ஒரு நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.
குண்டூரில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பிரதிபார புரஸ்காரம் விருதுகளை வழங்கிப் பேசிய அவர், இந்திய கலாச்சாரத்தில் தோன்றிய மதிப்பு சார்ந்த கல்வி முறை புதிய கல்விக் கொள்கையில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்த ஆசிரியர்களின் பணியையும் குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார். தனிநபர்களின் திறமையை அங்கீகரிப்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு அங்கம் என்றும் அவர் கூறினார். இந்திய இளைஞர்களிடையே திறமைக்கு பற்றாக்குறை ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், திறமை உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான திறனை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவை வலிமையான, நிலையான, அமைதியான மற்றும் பாரபட்சமற்ற அனைவரும் சமமாக நடத்தப்படக் கூடிய நாடாக மாற்ற வேண்டும் எனவும் திரு வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/pressreleasepage.aspx?prid=1802128
------
(रिलीज़ आईडी: 1802152)
आगंतुक पटल : 254