பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் 17வது நிறுவன தினத்தை கொண்டாடியது

Posted On: 01 MAR 2022 4:18PM by PIB Chennai

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம், இன்று தனது 17வது நிறுவன தினத்தை தில்லி செங்கோட்டையில் உள்ள ஆகஸ்ட் 15 மைதானத்தில் கொண்டாடியது. இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தை  மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி தலைமை விருந்தினராக பங்கேற்றார். குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் தலைவர் திரு. பிரியங் கானூங்கோ, பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் திரு. இந்தேவர் பாண்டே உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  ‘எதிர்காலத்தை பாதுகாப்போம்’ என்ற, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் புதிய குறிக்கோளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த புதிய குறிக்கோள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது எனவும், நமது குழந்தைகளின் நலன்தான் வலுவான நாட்டின் அடித்தளத்தை அமைக்கிறது என்றும்   அவர் கூறினார்.

பல மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் மத்திய அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி  கலந்துரையாடினார்.  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்துடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை ஏற்பாடு செய்திருந்த சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தை பருவ கதைகளை தெரிவிக்கும் கண்காட்சியையும் மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.

உயிர் தியாகம் செய்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக பாதுகாப்பு ஆலோசனை வழங்க ‘ஷகாரா’ என்ற பெயரில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்துடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நடவடிக்கையையும் மத்திய அமைச்சர் பாராட்டினார்.  இதன் மூலம் 2 மாதத்தில் 300 அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இணையதளம் மூலம் 127 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி  தெரிவித்தார்.

                                                                                ******************



(Release ID: 1802137) Visitor Counter : 1356