குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆரோக்கிய வனத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்

Posted On: 01 MAR 2022 12:53PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில், குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இன்று (01.03.2022) திறந்துவைத்தார்.

6.6 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த ஆரோக்கிய வனம், யோக முத்ரா செய்யும் மனிதன் அமர்ந்துள்ளது போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சுமார் 215 வகையான மூலிகைகள் மற்றும் தாவரங்கள், இந்த வனத்தில் நடப்பட்டுள்ளன. இது தவிர நீருற்றுகள், தண்ணீர் வாய்க்கால்கள், தாமரைக்குளம் மற்றும் காட்சிமுனை போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த ஆரோக்கிய வனத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் மனித உடலில் அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்து எடுத்துரைக்கும் நோக்கில் இந்த ஆரோக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வனம் தற்போது பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது.

-------(Release ID: 1802094) Visitor Counter : 107