நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22ம் காரீப் சந்தைப் பருவத்தில் 707.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் (2022 பிப்ரவரி 27ம் தேதி வரை) : 96.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,38,619.58 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை

Posted On: 28 FEB 2022 3:56PM by PIB Chennai

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில்,  விவசாயிகளிடமிருந்த  குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் கொள்முதல் செய்வது கடந்த ஆண்டைப் போலவே சுமூகமாக நடைபெறுகிறது.

2021-22ம் ஆண்டு காரீப் சந்தைப் பருவத்தில் 2022 பிப்ரவரி 27ம் தேதி வரை தமிழகம்,கேரளாகர்நாடகாதெலங்கானாபஞ்சாப்உத்தரப் பிரதேசம் உட்பட அரிசி உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் 707.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இதுவரை 96.41 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,38,619.58  கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19,18,889  மெட்ரிக் டன் நெல் 2,91,465 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுஇதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.3761.02 கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்அவற்றுக்கு வழங்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801802

                                                                                ************************


(Release ID: 1801857) Visitor Counter : 194