ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களின் அமைச்சர்கள் பங்கேற்கும் பிராந்திய மாநாட்டுக்கு பிப்ரவரி 28-ம்தேதி மத்திய ஜல்சக்தி அமைச்சர் தலைமை வகிக்கிறார்

प्रविष्टि तिथि: 27 FEB 2022 4:21PM by PIB Chennai

அசாமின் குவஹாத்தியில் பிப்ரவரி 28-ம்தேதி நடைபெறவுள்ள , வடகிழக்கு மாநிலங்களின் அமைச்சர்கள் பங்கேற்கும் பிராந்திய மாநாட்டுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் தலைமை வகிக்கிறார். ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) போன்ற முக்கியமான திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான விஷயங்கள் இந்தப் பிராந்திய மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டை : https://youtu.be/N2Wo8QLA6jA என்ற இணைப்பில் காணலாம்.

கடந்த 23-ம்தேதி நடைபெற்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, எவரையும் விட்டுவிடாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். காலவரையறையுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான திட்டமிடல் அவசியம் என்று கூறிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள், மற்றும் முன்னேறத்துடிக்கும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

இந்த அடிப்படையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வடகிழக்கு மாநிலங்களில்  ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த   ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் 2024-ம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை, கோவா, தெலங்கானா, அரியானா ஆகிய மூன்று மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நாகர்ஹவேலி, டாமன் & டையூ, புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்கள்  ஜல்ஜீவன் இயக்கத்தை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தியுள்ளன.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்.

****


(रिलीज़ आईडी: 1801631) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali