தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மும்பையில் உள்ள இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது

அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்

Posted On: 26 FEB 2022 4:41PM by PIB Chennai

மும்பையின் சினிமா ஆர்வலர்கள் மற்றும் நகரத்திற்கு வருபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கோவிட் பெருந்தொற்றின் போது மூடப்பட்டிருந்த இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகம் (என்எம்ஐசி) மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் டாக்டர். எல்.முருகன், அருங்காட்சியகம்  மீண்டும் திறக்கப்  பட்டத்தை அறிவிக்கும் வகையில் அதனை இன்று பார்வையிட்டார். குல்ஷன் மஹால் தொண்மைப்  பிரிவு மற்றும் தெற்கு மும்பை பெடர் சாலையில் உள்ள நவீன புதிய கட்டிடம் ஆகிய இரண்டு கட்டிடங்களில் பரவியிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவற்றை அவர் கூர்ந்து கவனித்தார்.

டாக்டர் முருகனுக்கு திரைப்படப் பிரிவுத்  தலைமை  இயக்குனர்  ரவீந்திர பாகர் அருங்காட்சியகத்தின் விவரங்களை அமைச்சருக்குத் தெரிவித்தார்.  அருங்காட்சியகம் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில்  இனி மேற்கொள்ள வேண்டிய விரிவான மறுசீரமைப்புப்  பணிகள் குறித்தும் அவர் விளக்கினார்.

இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்றான என்எம்ஐசி, 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

தொன்மையான குல்ஷன் மஹால்  கட்டிடத்தில் காட்சிப் பொருட்கள் , பல்வேறு அளவுகளில் எட்டு வெவ்வேறு அரங்குகளில் பரவி, அமைதியான காலத்திலிருந்து புதிய அலை வரையிலான இந்திய சினிமாவின் வரலாற்றைக் காணும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. ​​புதிய அருங்காட்சியக்  கட்டிடம் பெரும்பாலும் ஊடாடும் காட்சிகள் எனப்படும் பார்வையாளர் கட்டுப்படுத்தும் காட்சிகளைக்  கொண்டுள்ளது.

“வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அணிந்திருந்த கவசம், "அடிமை பெண்" படத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன்  அணிந்திருந்த சிவப்பு அங்கி உள்ளிட்ட கலைப்பொருட்களின் மிகப் பெரிய சேகரிப்பு என்எம்ஐசி வசம் உள்ளது.

திரைப்படச்  சொத்துக்கள், பழங்கால உபகரணங்கள், சுவரொட்டிகள், முக்கியமான படங்களின் பிரதிகள், விளம்பரத்  துண்டு பிரசுரங்கள், ஒலிப்பதிவுகள், டிரெய்லர்கள்,  பழைய சினிமா இதழ்கள், திரைப்படம் தயாரித்தல் மற்றும் விநியோகம் பற்றிய புள்ளிவிவரங்கள் போன்றவை இந்திய சினிமாவின் வரலாற்றை காலவரிசைப்படி சித்தரிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கிட்ஸ் ஃபிலிம் ஸ்டுடியோ மற்றும் காந்தி மற்றும் சினிமா ஆகியவை மற்ற முக்கிய இடங்களாகும்.

மே மாதம், அதிநவீன அரங்குகளை  உள்ளடக்கிய என்எம்ஐசி வளாகம், ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களுக்கான 17வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவை நடத்த உள்ளது.

 

***************(Release ID: 1801429) Visitor Counter : 164