உள்துறை அமைச்சகம்
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் புத்தகங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் வெளியிட்டார்
Posted On:
25 FEB 2022 2:41PM by PIB Chennai
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பதிப்பித்த புத்தகங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் புது தில்லியில் இன்று வெளியிட்டார். உள்துறை அமைச்சகத்தின் (உள்நாட்டு பாதுகாப்பு) சிறப்பு செயலாளர் திரு. வி .எஸ் .கௌமுதி, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் தலைமை இயக்குநர் திரு. பாலாஜி ஸ்ரீவத்சவா, உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர், காவல்படையினர் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களுக்கு தேவையான திறன் வளர்த்தலை உறுதி செய்ய காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதி பூண்டுள்ளதாக கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரை ரூபாய் 26,275 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது என்று திரு. நித்யானந்த் ராய் கூறினார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படைகளை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் முன்னெடுப்பின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பத்தை காவல்துறையினர் பயன்படுத்துதல், போதைப்பொருள் கட்டுப்பாடு,
வலுவான தடயவியல் அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி குற்ற நீதி வழங்கல் அமைப்பை வலுப்படுத்த இது உதவும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அமைப்பாக காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் விளங்குவதாகவும், இந்திய காவல் படைகளுக்கு அதன் தேவை இன்றியமையாதது என்றும் திரு. நித்யானந்த் ராய் கூறினார். காவல்துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தரநிலைகளை ஊக்கப்படுத்துவதில் 51 வருட சேவையை இந்த அலுவலகம் சமீபத்தில் நிறைவு செய்தது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801056
***************
(Release ID: 1801127)
Visitor Counter : 207