சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருத்துவம், பல்மருத்துவம், துணை மருத்துவ நிறுவனங்கள் / கல்லூரிகளில், மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உயிரி மருத்துவ கண்டுபிடிப்பு & தொழில்முனைவு குறித்த ஐசிஎம்ஆர் / டிஎச்ஆர் கொள்கைகளை டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

Posted On: 24 FEB 2022 3:40PM by PIB Chennai

“மருத்துவம், பல்மருத்துவம், துணை மருத்துவ நிறுவனங்கள் / கல்லூரிகளில், மருத்துவ  நிபுணர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உயிரி மருத்துவ கண்டுபிடிப்பு & தொழில்முனைவு குறித்த ஐசிஎம்ஆர் / டிஎச்ஆர் கொள்கைகளை” மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவாருடன்  இணைந்து புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.

போட்டி மிகுந்த உலகில் நாட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்ல, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், அடிப்படைத் தூணாக திகழ்கின்றன என்று குறிப்பிட்ட டாக்டர் மன்சுக் மாண்டவியா, “மருத்துவ சாதனங்கள் உட்பட,  சுகாதாரத்துறையில் ஆராய்ச்சி, தொழில்முனைவு மற்றும் கண்டுப்பிடிப்பு முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், இந்தியா தனது வலிமையை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில், பெருந்தொற்றுக் காலத்தில், தடுப்பூசி உற்பத்தி உள்ளிட்ட  தற்சார்பு நடவடிக்கைகளில் இந்தியா பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது என்றார். சுகாதார ஆராய்ச்சி இயக்ககம் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (DHR-ICMR) வெளியிட்டுள்ள இந்தக் கொள்கை, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பல்துறை ஒத்துழைப்பை இது உறுதி செய்வதோடு, ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தை ஊக்குவித்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிப்பு சார்ந்த சூழலை உருவாக்கும் என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

“நம் நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், தங்களது பணி அனுபவத்தின் அடிப்படையில், தலைசிறந்த அறிவாற்றலை பெற்றிருப்பதோடு, அடிப்படைப் பிரச்சினைகளுக்கு துல்லியமான தீர்வு காணும் திறன் பெற்றவர்கள்” என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800778

***************


(Release ID: 1800825) Visitor Counter : 230