தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தபால் நிலையங்களுக்கு 100 சதவீத கோர் வங்கி நடை முறையை உறுதி செய்வதற்கான செயல்முறை உத்திகள் குறித்து பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையதளக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது

Posted On: 24 FEB 2022 9:52AM by PIB Chennai

"எந்த ஒரு குடிமகனையும் பின்தங்க விட்டுவிடக்கூடாது" என்ற தலைப்பில் விவாதிப்பதற்காக  பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது

100 சதவீத தபால் நிலையங்களை கோர் வங்கி நடைமுறைக்கு கொண்டு வருவது மற்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து  இயங்கக்கூடிய தபால் அலுவலக கணக்குகள் மற்றும் கிராமப்புற ஏழைகள் குறிப்பாக பெண்களின் வாழ்வில் அதன் தாக்கம் போன்றவை தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகள்  குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி,  தொடக்க உரையாற்றினார். "எல்லா கிராமப்புற ஏழை மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் நிதிச் சேவைகளுக்கான வாய்ப்புகளை உறுதி செய்தல்" என்ற அடிப்படையில்  "எங்கும், எப்போதும் வங்கிச் சேவைகள் மற்றும் இந்திய அஞ்சலகங்கள்  மூலம் இயங்கக்கூடிய சேவைகள்" என்ற தலைப்பில் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர்திரு கிரிராஜ் சிங் தலைமையில்  இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் நித்தி ஆயோக் மற்றும் பிற முகமைகளின்  வல்லுநர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அஞ்சல் அலுவலக திட்டங்களுடன் தொடர்புடைய ஏராளமான மக்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். 100 சதவீத கோர் வங்கி அமைப்பை உறுதி செய்வதற்கான நடைமுறை உத்திகள் மற்றும் தபால் அலுவலக கணக்குக்குகளுக்கான  சேவையை வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் நிதி மற்றும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்கு அஞ்சல் இணையதளச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை  ஆராய்வதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.

நித்தி ஆயோக் அமைப்பின் நிபுணரான திரு  அஜித் பாய், கடன், நிதிசார் நடவடிக்கைகள் குறித்த அறிவு  மற்றும் நிதிசார் நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த சாதனை ஆகியவற்றில் அஞ்சலகங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்று வலியுறுத்தினார்.

இந்த இணையதளக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களை உரிய நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான  விரிவான வழிமுறைகளைச் சம்மந்தப்பட்ட துறை  தயாரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1800687&RegID=3&LID=1

***************


(Release ID: 1800774) Visitor Counter : 307