நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இஆர்பி முறையை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கிவைத்தார்

Posted On: 24 FEB 2022 10:38AM by PIB Chennai

நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேலும் விரிவுபடுத்த முக்கியமானதாக இருப்பது நீடித்த, பயனுள்ள முறையில் அண்மைக்கால தகவல் தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்யும் அணுகுமுறையை அமலாக்கம் செய்வதாகும் என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.

 புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இஆர்பி முறையின் அமலாக்கத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் திரு ஜோஷி, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஜன் தன் கணக்கு தொடங்குவதற்கு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப கருவிகள் நன்கு பயன்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

 எரிசக்தித் துறையில் உலகளாவிய செயற்பாட்டாளர் என்ற முறையில் இந்திய நிலக்கரி நிறுவனத்தை  நிலைநிறுத்துவது இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று  அவர் கூறினார். இந்திய நிலக்கரி நிறுவனம் முழுமைக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் சிறந்த வணிக நடைமுறைகளை இஆர்பி நிறுவுவதோடு வணிக நடைமுறையை தரப்படுத்தி ஒன்றுப்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்திய நிலக்கரி நிறுவனம் முழுமைக்குமான இஆர்பி அமலாக்கம், அரசின் டிஜிட்டல் மற்றும் புதிய இந்தியாவை நோக்கிய முயற்சிக்கு ஊக்கமளிக்கும் என்று அமைச்சர் திரு. ஜோஷி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நிலக்கரி, சுரங்கங்கள், ரயில்வே துறை இணையமைச்சர் திரு ராவ் சாஹேப் பாட்டில் தன்வே, நிலக்கரித் துறை செயலாளர் டாக்டர் அனில்குமார் ஜெயின் ஆகியோர் “இந்தியாவின் எரிசக்தி தேவைகளை ஊக்கப்படுத்துவது” என்ற புத்தகத்தை வெளியிட்டனர். உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளை இந்த நூல் சித்தரிக்கிறது.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800692

***************


(Release ID: 1800725) Visitor Counter : 255