நிதி அமைச்சகம்

நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் 25-வது கூட்டம் மும்பையில் நடைபெற்றது

Posted On: 22 FEB 2022 2:20PM by PIB Chennai

நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் 25-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில்  மும்பையில் இன்று நடைபெற்றது. பட்ஜெட்டுக்கு பிந்தைய மக்கள் தொடர்பு நிகழ்ச்சிக்காக இரண்டு நாள் பயணமாக மும்பை வந்த நிதி அமைச்சர், தொழில்துறை மற்றும் நிதிச் சந்தைகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து வருகிறார். 

 உலக மற்றும் உள்ளூர் நிகழ்வுகளால் உருவாகியுள்ள முக்கிய பொருளாதாரச் சவால்கள் குறித்து நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிதி நிலைமைகள் மீதும் நிதி அமைப்புகளின் செயல்பாடுகள் மீதும் அரசு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 நிதித்துறை மேலும் வளர்வதற்கும் பெரும் பொருளாதார நிலைத்தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நிதி மேலாண்மை தொடர்பான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் துணைக் குழு நடவடிக்கைகள் குறித்தும், குழுவின் முந்தைய முடிகளின் மீது உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

 

நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் 25-வது கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிதி நிலைத்தன்மையைப் பேணுவதற்கான செயல்பாட்டை வலுப்படுத்தி முறைப்படுத்துவதற்கும், ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், நிதித் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் என நிதிச் சந்தை ஒழுங்குமுறை அமைப்புகள் உடனான ஆலோசனைக்குப் பின்னர் நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவை அரசு அமைத்தது.

  மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800262

***************



(Release ID: 1800293) Visitor Counter : 224