பிரதமர் அலுவலகம்
ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 FEB 2022 1:51PM by PIB Chennai
ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனாவில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ள விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்”
“ஹிமாச்சல பிரதேச தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் : பிரதமர்”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1800291)
வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam